Trending News

அரச அதிகாரிகள், காணி பெற முடியுமென்றால் அப்பாவி மக்களுக்கு ஏன் தடை போடுகின்றார்கள்.? – ரிப்கான் பதியுதீன் ஆவேசம்

(UTV|COLOMBO) “நானாட்டான், தீவுப்பிட்டி கிராமத்தில் பிரதேச செயலக ஊழியருக்கு காணி பெற்றுக்கொள்ள முடியுமென்றால் பாரம்பரியமாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு காணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொடுக்க ஏன் முட்டுக்கட்டை போடப்படுகின்றது” என்று முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கேள்வியெழுப்பினார்.

25 வருடங்களுக்கு மேலாக தீவுப்பிட்டியில் வாழ்ந்து வரும் மக்களை வெளியேறுமாரும் அந்தக் காணிகள் அரச காணிகள் என அதிகாரிகளால் கூறப்படுவது தொடர்பிலும், எழுந்துள்ள பிரச்சினையை அடுத்து முருங்கன் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கான விசாரணை இன்று (18) அங்கு நடைபெற்றது.

அரச அதிகாரிகள் தங்களை அந்த பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்துவதாக கிராமத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் பொலிஸில் தெரிவித்தனர் .பொலிஸ் நிலையத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பிரத்தியேக செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் ஆகியோரும் சமூகமளித்து மக்கள் சார்பில் குரல்கொடுத்தனர். விசாரணைகளின் போது மன்னார் பிரதேச செயலகத்திலிருந்து வருகை தந்த அதிகாரி ஒருவர் தமக்கும் அங்கு உரித்தான காணி இருப்பதாக தெரிவித்த போதே, அதிகாரிகள் காணிகளை பெற்றுக்கொள்ள முடியுமானால் அப்பாவி மக்களுக்கு ஏன் தடை போடுகின்றீர்கள்? என ரிப்கான் பதியுதீன் கேள்வியெழுப்பினார். அதிகாரிகள் மக்களை வேண்டுமென்று அச்சுறுத்திக்கொண்டிருப்பதை கைவிட வேண்டும் எனவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் சுமூக வாழ்வுக்கு உதவ வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விசாரணையின் பின்னர் இந்த பிரச்சினையை பிரதேச செயலாளருடன் மீண்டும் ஒரு தடவை பேசி, தீவுப்பிட்டி மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கும் வகையில் சமரசமான தீர்வொன்றை மேற்கொள்வதென அங்கு முடிவு செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

 

 

 

 

Related posts

Sri Lankan apprehended by the Customs Officers with 1.15 kg gold

Mohamed Dilsad

Mickey Arthur arrives in Sri Lanka

Mohamed Dilsad

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment