Trending News

ஐந்து மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை..

(UTVNEWS | COLOMBO) – நாட்டின் சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(21) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Related posts

Russian air strikes in Syria kill dozens

Mohamed Dilsad

வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்…

Mohamed Dilsad

Four Police Officers interdicted

Mohamed Dilsad

Leave a Comment