(UTVNEWS | COLOMBO) – பாளி மொழியிலான தேரவாத திரிபீடகத்தை யுனெஸ்கோ (UNESCO)உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்குவதற்கான தொழிநுட்ப செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவொன்றை நியமித்துள்ளார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் எசெல வீரகோன், பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும ஆகியோரின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த குழுவில் சங்கைக்குரிய பேராசிரியர் மெதகம்பிட்டிய விஜித நந்த தேரர், வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஜீ.விஜித நந்தகுமார், இலங்கை யுனெஸ்கோ ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் பிரேமலால் ரத்னவீர, தொல்பொருள் திணைக்களத்தின் பதில் கடமை பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவல, பேராசிரியர்களான கே.டீ.பரணவிதான, மாலினீ எந்தகம, பி.பீ.நந்ததேவ, சந்திம விஜேபண்டார ஆகியோர் உள்ளடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(ஜனாதிபதி ஊடக பிரிவு)