Trending News

ஸ்ரீ.சு.க மற்றும் ஸ்ரீ.பொ.பெ இடையே ஏப்ரல் 10 மீளவும் பேச்சுவார்த்தை…

(UTV|COLOMBO) ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சிகளுக்கிடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ அலுவலகத்தில் இன்று(21) இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இரு கட்சிகளுக்குமிடையில் அடுத்த கட்டப் பேச்சுவார்தை எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சி சார்பில் அதன் தலைவர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

Related posts

Showers to reduce from tomorrow

Mohamed Dilsad

ஹாங்காங்கில் தானியங்கி மதுக்கடை

Mohamed Dilsad

புகையிலை பாவனை காரணமாக இலங்கையில் வருடாந்தம் 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்

Mohamed Dilsad

Leave a Comment