Trending News

கர்ப்பிணி தாய்மார் அல்லது பிரசவத்துக்கு பின்னர் தாய்மாருக்கு காய்ச்சல் – உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க அறிவுறுத்தல்

(UTV|COLOMBO) கர்ப்பிணி தாய்மார் அல்லது பிரசவத்துக்கு பின்னர் தாய்மாருக்கு காய்ச்சல் நோய் ஏற்பட்டால் முதல் நாளிளேயே வைத்தியசாலையில் சேர்க்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

தற்பொழுது பரவி வரும் டெங்கு மற்றும் இன்புளுவென்சா நோயினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார் ஏனையவர்களிலும் பார்க்க அபாய நிலைக்கு உள்ளாகக்கூடும் தொண்டைக்கும், பாதிப்பு ஏற்படும். குடும்ப சுகாதார பணியகத்தின் தகவல்களுக்கு அமைவாக இன்புளுவென்சா நியுமோனியா ஆகியவற்றினால் இந்த வருடத்தில் இரு தாய்மார் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

2018ஆம் ஆண்டில் 11 கர்ப்பிணி பெண்கள் நியுமோனியா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய 2017ஆம் ஆண்டில் டெங்கு மற்றும் இன்புளுவென்சா நோயின் காரணமாக 41 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்.

கர்ப்பிணி தாய்மார் காய்ச்சல் உள்ளிட்ட நோய் இலட்சனங்கள் காணப்படுவோருக்கு அருகாமையில் செல்வதை தவிர்த்து கொள்ளவேண்டும். கூடுதலான மக்கள் காணப்படும் இடங்களிலும் தங்கியிருப்பதை தவிர்த்துக்கொள்வதுடன் முறையான சுவாச செயற்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

காய்சலினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி அல்லது பிரவசத்துக்கு பின்னரான தாய்மார் முதல் நாளிலேயே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு விஷேட சிகிச்சையை வழங்கமுடியும் என்று சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

பாணந்துறையில் இரண்டு பேர் கைது

Mohamed Dilsad

உலக நீர் தினத்தை முன்னிட்டு குடிநீர் பவுசர்கள் விநியோகம்

Mohamed Dilsad

‘Ali Roshan’ remanded

Mohamed Dilsad

Leave a Comment