Trending News

இன்றைய காலநிலை…

(UTV|COLOMBO) இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதேபோல் ,மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனீமூட்ட காலநிலை எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வடமேல் மாகாணத்திலும் கொழும்பு, மன்னார், மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் வெப்பமான வானிலை நிலவக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை வானிலை அவதான நிலையம் விடுத்துள்ளது.

இதன்காரணமாக பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

 

 

Related posts

எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்

Mohamed Dilsad

விவசாயிகளுக்கு இலவச விதை நெல்

Mohamed Dilsad

Ali century anchors cautious Pakistan to 376

Mohamed Dilsad

Leave a Comment