Trending News

நயன்தாரா படத்துக்கு யுவன் இசையமைக்கமாட்டாரா?

(UTV|INDIA) தமிழில்  கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன், அஜித் குமார் நடித்த பில்லா 2 ஆகிய  படங்களை இயக்கியவர், சக்ரி டோலட்டி. தற்போது அவரது இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம், கொலையுதிர் காலம். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியபோது யுவன்சங்கர்ராஜா, பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு தவிர்க்க முடியாத காரணங்களால் யுவன் விலகி விட்டார்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அப்போது யுவன் தனது டிவிட்டரில், ‘கொலையுதிர் காலம் படத்துக்கு  நான் இசை அமைக்கவில்லை’ என்று தகவல் வெளியிட்டார். இதுகுறித்து பட தரப்பு  கூறுகையில், ‘முதலில் யுவன் இசை அமைக்க முடிவானது.

பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கும், அவருக்கும் பிரச்னை இருப்பது தெரியாது. யுவன் பேசும்போது, ‘இந்த பிரச்னையை நாங்கள் பேசி முடித்துக் கொள்கிறோம்’ என்றார். மேலும், தனது பெயரை படத்தின்  விளம்பரங்களில் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து  அவரது பெயரை நீக்கினோம்’ என்றனர்.

 

 

 

 

Related posts

Missing fishermen rescued and brought ashore

Mohamed Dilsad

SAITM medical degrees accepted by SLMC – Court

Mohamed Dilsad

கோட்டை வெசாக் வளையம் இரத்து

Mohamed Dilsad

Leave a Comment