Trending News

நாட்டின் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

(UTV|COLOMBO) நாட்டின் சில மாவட்டங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

 

 

 

Related posts

கடைசியாக பிரியாணி சாப்பிட்ட துபாய் வாலிபர்…

Mohamed Dilsad

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் மொஹமட் சிராஸும் வாய்ப்பு

Mohamed Dilsad

“Furious” Producer sues over spin-off

Mohamed Dilsad

Leave a Comment