Trending News

நுவரெலியாவில் குதிரை பந்தயம்

(UTV|COLOMBO) ரோயல் குதிரை போட்டி கழகம் இம்முறை நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள தொடர் குதிரைப் போட்டியின் முதலாவது சுற்று நாளை நடைபெறவுள்ளது.

நுவரெலிய குதிரைப் பந்தயத் திடல் தற்போது முழுமையாக சீர் செய்யப்பட்டுள்ளது. போட்டியின் இரண்டாம் சுற்று ஆளுநர் வெற்றிக் கிண்ண மற்றும் இராணி வெற்றிக் கிண்ணத்திற்காக அடுத்த மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது. மூன்றாம் சுற்று நகர முதல்வர் வெற்றிக் கிண்ண மற்றும் மெஜிக் மில்லியன் வெற்றிக் கிண்ணத்திற்காக அடுத்த மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. போட்டிகளில் 60 குதிரைகள் கலந்து கொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, ஹரின் பெர்னாண்டோ மற்றும் மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரட்ன ஆகியோரின் தலைமையில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

 

 

 

 

Related posts

Mangala meets Boris Johnson on UK visit

Mohamed Dilsad

இரு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம் [VIDEO]

Mohamed Dilsad

தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும்

Mohamed Dilsad

Leave a Comment