Trending News

நாட்டின் சில இடங்களுக்கு மழையுடன் கூடிய வானிலை…

(UTV|COLOMBO) பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், இரத்தினபுரி, மொனராகலை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

 

 

 

 

 

 

 

Related posts

Iranian ‘bomb plotter’ stripped of diplomatic immunity

Mohamed Dilsad

நாலக சில்வாவின் கருத்துக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு உத்தரவு

Mohamed Dilsad

ரூ.123 கோடி செலவில் தயாரான தங்கம் மற்றும் வைரக்கற்களாலான ஷுக்கள் …

Mohamed Dilsad

Leave a Comment