(UTV|COLOMBO) தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, இணையம் முதலான ஊடகங்கள் சார்ந்ததாக 47 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர தெரிவித்தார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்.
இலங்கையின் முதலாவது ஊடக ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் பத்தாம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மேலும் இலங்கையில் ஒழுக்க விழுமியங்களை மதித்து செயற்படகூடிய ஊடக சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.
விழாவிற்குரிய நடுவர் குழாம் அங்கத்தவர் பேராசிரியர் பட்ரிக் ரத்நாயக்க கருத்து வெளியிடுகையில், இம்முறை கலாநிதி எட்வின் ஆரியதாஸ, கருணாரத்ன அமரசிங்க, லூஷன் புளத்சிங்கள, லக்ஷ்மன் ஜயவர்த்தன ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளைப் பெறுவார்கள் என தெரிவித்தார்.