Trending News

தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTV|COLOMBO) சிங்கள, தமிழ் புத்தாண்டு சுபநேர சீட்டு சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று(02) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

பாரம்பரியங்களுக்கேற்ப சுபநேரங்களை அடையாளப்படுத்திய சீட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

புதுவருடப் பிறப்பு புண்ணிய காலம், உணவு சமைத்தல், அடுப்பு மூட்டுதல், உணவு பரிமாறுதல் மற்றும் தொழிலுக்காக புறப்படுதல் ஆகிய விடயங்கள் சுபநேர சீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சின் செயலாளர் பர்னாட் வசந்த, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

 

 

Related posts

US psychedelic pioneer and guru Ram Dass dies aged 88

Mohamed Dilsad

எதிர்வரும் 11 ஆம் திகதி இஸ்ரேல் பிரதமர், இந்தியா விஜயம்

Mohamed Dilsad

Sri Lanka Navy apprehends a boat with 88 Sri Lankans

Mohamed Dilsad

Leave a Comment