Trending News

ஊவா மாகாண அரச வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பில்…

(UTV|COLOMBO) தெமோதர மாவட்ட வைத்தியசாலைக்கு மத்தியில் வீதியொன்றை நிர்மாணித்தல் மற்றும் அது தொடர்பான பிரச்சினையின்போது ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் திசாநாயக்க செயற்பட்ட விதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊவா மாகாணத்தின் அனைத்து அரச வைத்தியர்களும் இன்று(03) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த இந்த பிரச்சினை தொடர்பில் மாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட போதிலும் உரிய தீர்மானம் ஒன்று எட்டமுடியாமல் போனதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண தொடர்பாளர் டாக்டர் பாலித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தெமோதர பிரதேச வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாக அங்குள்ள நிர்வாகக்குழு, பதுளை மாவட்ட சுகாதார சேவை அலுவலகத்துக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கடும் வாகன நெரிசல்

Mohamed Dilsad

பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துரையாடல்

Mohamed Dilsad

பாடசாலைகள் மூடப்படவுள்ளன

Mohamed Dilsad

Leave a Comment