(UTV|COLOMBO) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியும் இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்து, 1,000 வைத்தியர்கள், இன்று (04) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் வரையிலும் எதிர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்புப் பேரணியில், அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரிகளின் 17 சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளதுடன், நிறைவேற்றுச் சேவையாளர்கள் முகம் கொடுக்கும் சம்பளப் பிரச்சினையைத் தீர்த்துகொள்வது, இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் எனவும் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.