(UTV|BRUNEI) புரூணையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து மரணத்தண்டனைக்குட்படுத்தும் கடுமையான இஸ்லாமிய சட்டத்தை புரூணை நேற்று முதல் அறிமுகப்படுத்துகிறது.
இந்த புதிய சட்டத்தின் நடைமுறை நேற்று (புதன்கிழமை) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இப்புதிய மரண தண்டனைச் சட்டமானது திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களையும் உள்ளடக்கியுள்ளது.
புரூணையின் இந்த புதிய நடவடிக்கை சர்வதேச ரீதியில் கடும் கண்டனங்களை தூண்டிவிட்டுள்ளதோடு,புரூணையில் ஓரினச்சேர்க்கை ஏற்கனவே சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறும் குற்றமாகும் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.