Trending News

மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO) சப்ரகமுவ, மத்திய, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது பின்னர் கிழக்கு மாகாணத்திற்கும் பரவக் கூடும்.

மேலும் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் தென்கிழக்கு கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

விசேட வைத்திய நிபுணர்களுக்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில்…

Mohamed Dilsad

மது போதையில் வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது

Mohamed Dilsad

Lion Air flight crashes in Indonesia

Mohamed Dilsad

Leave a Comment