Trending News

ஜனாதிபதி ஊடக விருது விழா இன்று கொழும்பில்…

(UTV|COLOMBO) ஜனாதிபதி ஊடக விருது விழா இன்று பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் உயர் அதிகாரிகளுடன் பெருமளவு ஊடகவியலாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.இவ் ஊடக விருது விழாவில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்கள் ஆகியவற்றுக்கான 47 விருதுகள் மற்றும் 04 விசேட விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் ஊடகத்துறை அமைச்சருமான ருவன் விஜேவர்த்தனவின் தலைமையில் அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீரவின் வழிகாட்டலில் ஊடகத்துறை அமைச்சு இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.இலங்கையில் ஒழுக்க விழுமியங்களை மதித்து செயற்படகூடிய ஊடக சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இவ் ஜனாதிபதி ஊடக விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

Related posts

பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(03) இரத்து

Mohamed Dilsad

வட, தென் கொரியா-அமெரிக்கா ரகசிய பேச்சுவார்த்தை

Mohamed Dilsad

Asia stock markets drop sharply after US falls

Mohamed Dilsad

Leave a Comment