Trending News

பிரபல நடிகை செய்த காரியம்…

(UTV|INDIA) தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளவர் நடிகை சங்கீதா. குறிப்பாக பாலாவின் பிதாமகன் படம் இவரை மிகவும் பிரபலமடைய செய்தது.

பிறகு பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்ட இவர் மீது இவரது தாய் பானுமதி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அப்புகாரில், வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்துவரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என் மகள் சங்கீதா என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு சங்கீதாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்ப, இரு தினங்களுக்கு முன் கணவர் க்ரிஷுடன் ஆணையத்தில் ஆஜரானார் சங்கீதா.

இந்த புகார்க்கான காரணம் என்னவென்றால், சங்கீதா பேரில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை தன் அண்ணன் தம்பிங்க அபகரிச்சுடுவாங்களோனு சங்கீதாவுக்கு சந்தேகம். அதுக்கு தன் அம்மாவும் துணைபோயிடுவாங்களோனு பயப்படுறாங்க. இந்தச் சூழல்ல வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னா அவங்க எங்கப்போவாங்க? அதனாலதான் மகளிர் ஆணையத்துல புகார் தந்திருக்காங்க.

 

 

 

 

Related posts

ஊழல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

Mohamed Dilsad

Crown Prince meets Disney CEO, discusses potential projects in Saudi Arabia

Mohamed Dilsad

ரிஷாட் பதியூதீனுக்கு அமைச்சு வழங்கினால் மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரரணை- அத்துரலிய ரத்ன

Mohamed Dilsad

Leave a Comment