Trending News

எதிர்வரும் புதன்கிழமை தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய வைபவம்…

(UTV|COLOMBO) சித்திரை புத்தாண்டில் பௌத சம்பிரதாயங்களுக்கு அமைவான தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய வைபவம் நாளை மறுதினம் காலை 7.40ற்கு இடம்பெறவுள்ளது.

இந்த தேசிய வைபவம் களுத்துறை ஸ்ரீ சுபோதிராஜ ராம மஹா விஹாரை வளாகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறுவதோடு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்.

கிழக்கு நோக்கிய பார்வையுடன்,பச்சை நிற வஸ்து அல்லது அதற்கு சமமான ஆடை அணிந்து தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.
இதேவேளை பௌத சம்பிரதாயங்களுக்கு அமைவாக எதிர்வரும் 18ம் திகதி காலையில் சுபவேளையான 4.52ற்கு புத்தாண்டில் தொழிலுக்குச் செல்லும் நேரம் உதயமாகிறது. தொழிலுக்குச் செல்வோர் பச்சை நிறம் அல்லது அது சார்ந்த வர்ணத்தைக் கொண்ட ஆடை அணிந்து கிழக்கு நோக்கிய பார்வையுடன் செல்லலாம்.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லாவை போட்டியிடுமாறு வேண்டுகோள்

Mohamed Dilsad

அரசியலில் உள்ள அனைவரும் ஊழல் மோசடியாளர்களை பாதுக்கின்றனர் – [VIDEO]

Mohamed Dilsad

Sri Ranga and 5 others granted bail

Mohamed Dilsad

Leave a Comment