Trending News

மேலதிக வெளியேறும் வாயில்களை நிர்மாணிக்க நடவடிக்கை…

(UTV|COLOMBO) தெற்கு அதிவேக வீதியின் தெரிவுசெய்யப்பட்ட சில இடங்களில் மேலதிக வௌியேறும் வாயில்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையின் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலையின் முகாமைத்துவம் மற்றும் நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இதற்கு மேலதிகமாக பிரயாணிகளின் நலன் கருதி மேலதிக அலுவலக பணியாளர்களையும் சேவையில் இணைத்துக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய வௌியேறும் வாயில்களை அண்மித்த பகுதியில் நெரிசல் ஏற்படுகின்றதா என்பது தொடர்பில் அறிந்துகொண்டு அதன் பின்னர் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவது சிறந்தது எனக் கூறிய எஸ். ஓப்பநாயக்க, இது தொடர்பில் அறிவதற்காக 1969 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

உலகின் மிக வயதான நபர் காலமானார்

Mohamed Dilsad

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் பலர் பலி…

Mohamed Dilsad

Over 300 STF constables promoted as sergeants

Mohamed Dilsad

Leave a Comment