Trending News

1,271 பேரின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்…

(UTV|COLOMBO) தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 1,271 பேரின் சாரதி அனுதிப்பத்திரங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த 11 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்தக் காலப்பகுதியில் வீதி ஒழுங்குகளை மீறிய சாரதிகள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

New stamp issued for Christmas under Min. Haleem’s Patronage

Mohamed Dilsad

சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு 15 வருட கடூழிய சிறை

Mohamed Dilsad

ஒக்டோபர் 8ம் திகதி வரை கொரிய மொழி தேர்ச்சி பரீட்சை நடைபெறும்

Mohamed Dilsad

Leave a Comment