(UTV|FRANCE) 850 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அவை 5 வருடங்களில் சீரமைக்கப்படும் என்று ஜனாதிபதி மெக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் 850 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. தேவாலயத்தை சீரமைக்க நிதி குவிந்து வருகிறது.
பிரான்ஸின் மிகப்பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான 850 வருடங்கள் பழைமைவாய்ந்த நோட்ரே டேம் (Notre – Dame) தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும், மணிக்கோபுரங்கள் இரண்டும் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், பேராலயத்துக்குள் உள்ள கலைப்படைப்புக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.