Trending News

ரஜினிக்கு வில்லியாக நயன்தாரா?

(UTV|INDIA) ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இல்லாமல், வில்லியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பேட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

ஆனால் அவர் இப்படத்தில் ரஜினியின் ஜோடி இல்லை, படத்தில் ரஜினிக்கு ஜோடியே இல்லை என்றும் தகவல் வருகிறது. தந்தை மகள் பாசத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார் எனவும், நயன்தாரா இந்த படத்தில் ரஜினிக்கு வில்லியாக அல்லது ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படம் முழுக்க வரும் கேரக்டர் என்பதால் இந்த படத்துக்காக தொடர்ச்சியாக 60 நாட்கள் வரை நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். ஏற்கனவே சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் ரஜினி-நயன்தாரா ஜோடி இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

Anne Hathaway recalls feeling pressured to lose weight at 16

Mohamed Dilsad

Customs Trade Unions to reach a decision on strike today

Mohamed Dilsad

මහ වැසි සමග ජල ගැලීම් කාලගුණයෙන් අනතුරු ඇඟවීම්

Editor O

Leave a Comment