Trending News

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வு

(UTV|COLOMBO) நாட்டின் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

500 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இதுவரையில் 375 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 38 வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச் பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிசாலில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பிரதிபலிப்பாகவே இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத குழு தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

Sri Lanka Naval ships inspected by the President of Singapore

Mohamed Dilsad

Former Chilean President Michelle Bachelet appointed as new UN Human Rights Chief

Mohamed Dilsad

FaceApp may pose ‘counterintelligence threat’ says FBI

Mohamed Dilsad

Leave a Comment