Trending News

ஜூம்மா தொழுகையை பாதுகாப்பு காரணங்களுக்காக தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிப்பு

(UTV|COLOMBO) பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இன்றைய தினம் (26) ஜூம்ஆத் தொழுகையினை தவிர்த்து கொள்ளுமாறு தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எச்.எம்.ஏ ஹலீம் கூறியுள்ளார்.

மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலும், விஷேடமாக நகர் புறப் பகுதிகளிலும் ஜூம்ஆத் தொழுகையை தவிர்த்து கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக நாட்டில் அசாதார சூழ்நிலைய ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் கூறியுள்ளார்.

 

Related posts

பாராளுமன்றம் 05ம் திகதி வரை ஒத்திவைப்பு

Mohamed Dilsad

Indian media says medicinal waste accumulating on Lankan shores allegedly from India

Mohamed Dilsad

Zuckerberg outlines plan for ‘privacy-focused’ Facebook

Mohamed Dilsad

Leave a Comment