Trending News

வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

(UTV|COLOMBO) ‘போனி’ சுறாவளியானது மேலும் வலுவடைந்து, நாளை மாலை அளவில் இலங்கையின் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள ‘போனி’ சுறாவளியானது மேலும் வலுவடைந்து, நாளை மாலை அளவில் இலங்கையின் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் 12 மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாகவும் தொடர்ந்து 24 மணித்தியாலங்களில் ஒரு மிகப் பலத்த சூறாவளியாகவும் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் அந்த நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேபோல், மேல், தென், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் 150 மி.மீ அளவான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் ,தென், மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

Sri Lanka interested in buying oil from Iran

Mohamed Dilsad

US to delay further tariffs on Chinese goods

Mohamed Dilsad

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க போராட்டத்தில்…

Mohamed Dilsad

Leave a Comment