Trending News

மே தினக் கூட்டத்தை இரத்து செய்த கட்சிகள்

(UTV|COLOMBO) ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி இணைந்து நடாத்த திட்டமிட்டிருந்த மே தின பேரணி மற்றும் கூட்டதை ரத்துச் செய்து மே தினத்தன்று விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்டவெடிப்புச் சம்பங்களை அடுத்து பொது மக்­களின் பாது­காப்பு கருதி மே தினக்­ கூட்­டங்­களை இரத்து செய்­வ­தாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்திருந்தார்.

 

 

Related posts

Sri Lanka vs England 1st ODI Sri Lanka won the toss and elected to bowl

Mohamed Dilsad

கொழும்பு பிரதான நீதிவான் பரிசோதனையின் கீழ் கொச்சிக்கடை ஆலயம்…

Mohamed Dilsad

Subject purview of new Ministries gazetted

Mohamed Dilsad

Leave a Comment