Trending News

பொது மக்களுக்கான அறிவுறுத்தல்

(UTV|COLOMBO) பானிப் புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுரைகளில் பொது மக்கள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

புயலினால் ஏற்படும் அனர்த்தத்தை எதிர்க்கொள்ள கூடிய வகையில் இடர் முகாமைத்துவ நிலையம் தனது சகல பிரதேச அலுவலகங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது. இராணுவம் பொலிஸார் உதவியையும் அலுவலகம் பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் கடும் காற்றுடன் எதிர்வரும் 12 மணித்தியால காலப் பகுதி நகரக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு கடல் பகுதிகளில் கடற் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தமது நடவடிக்கைளில் இருந்து விலகி இருக்குமாறு நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம். நேற்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி இடம்பெற்றது. விஷேடமாக மண்சரிவு அனர்த்தம் உள்ள பகுதிகளில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

 

 

 

 

 

Related posts

இந்தியாவில் அகதிகளாக உள்ள ஈழத் தமிழர்களை இலங்கைக்கு அழைக்கின்றோம் – செல்வம் அடைக்கலநாதன் [VIDEO]

Mohamed Dilsad

පාර්ලිමේන්තු මැතිවරණයට අලුත් සන්ධානයක්

Editor O

எல்ல – வெல்லவாய வீதி மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment