Trending News

முஸ்லிம் பெயரில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் வேதனையடைந்துள்ளோம்-அமைச்சர் றிஷாத் பதியுதீன்

(UTV|COLOMBO) கடந்த  ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு பாதுகாப்பு தரப்பிற்கு இயலுமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“முஸ்லிம் பிள்ளைகள் செய்த காரியத்தினால் வெட்கத்தினை விடவும் வேதனை அதிகமாக இருக்கிறது. முஸ்லிம் பெயரில் இவ்வாறான மிலேச்சத்தனமான காரியத்தில் ஈடுபட்டதை இட்டு வெட்கமடைகிறேன்.

இந்த தீவிரவாத, பயங்கரவாத கும்பல் தொடர்பில் எமது உலமா சபையின் தலைவர் உள்ளிட்டளாக அரசியல்வாதிகள் கூட உத்தியோகபூர்வமாக, குறித்த அமைப்பின் பொறுப்புதாரி சஹ்ரான் தொடர்பிலும், அவரது குரல் வெட்டு தொடர்பிலும் பாதுகாப்பு செயலாளருக்கு முன்னரே முன்வைத்துள்ளனர்..”

ஐ.எஸ்.ஐ.எஸ். இல் கதைத்தவர்கள் அண்மையில்தான் அதில் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு. இது தொடர்பிலான விரிவான தகவல்களை நாம் ஏற்கனவே வழங்கியுள்ளோம். எம்மால் இயன்ற அனைத்தினையும் செய்தோம். ஆனால் பாதுகாப்பு பிரிவினால் இதனை கண்டுபிடிக்க முடியவில்லை.. 22 இலட்ச ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் இதனால் கவலையில் இருக்கிறோம்.

ஐ.எஸ்.ஐ.எஸ். நடவடிக்கையானது இஸ்லாம் மதத்திற்கு முற்றிலும் விரோதமானது. இதற்குள் சிக்குண்ட பிள்ளைகளுக்கு இது தொடர்பில் போதிய அறிவில்லை என்றே கூற வேண்டும்..” என தெரிவித்திருந்தார்.

இருந்தாலும், குறித்த ‘ஹிரு’ தனியார் தொலைகாட்சியின் ‘சலகுன’ நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ஊடகவியலாளர்கள் மூவருக்கும் ஊடக தர்மம் மறந்துவிட்டது என்றே குறித்த நிகழ்ச்சியினை நோக்கும் பார்வையாளர்களுக்கு தெட்டத் தெளிவாக தோன்றுகிறது என கூறலாம். பொதுவாக ஒரு கேள்வி முன்வைக்கும் பட்சத்தில் அதற்கான முழுமையான பதிலினை அளிக்க முன்னரே ஊடகவியலாளர் தன்னிடமுள்ள அனைத்து சான்றுகளையும் முன்வைத்து ஒரு சாராரை மிதிப்பது எவ்வாறு விருதுகளை தட்டிச் சென்ற ஊடகமொன்றினால் முடியும் என்பது கேள்விக்குரியதே… 

 

 

 

 

 

Related posts

Du Plessis wants South Africa to let go of fear of failure

Mohamed Dilsad

அதிக வெப்பமான வானிலை…

Mohamed Dilsad

Rohit Sharma set to lead in Sri Lanka Tri-Series

Mohamed Dilsad

Leave a Comment