Trending News

குமார் சங்ககாரவிற்கு கிடைத்த வாய்ப்பு…

லண்டனில் உள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய பிரிட்டன் குடியுரிமை இல்லாத ஒருவரை அந்தக் கழகத்தின் தலைவராக நியமிப்பது இதுவே முதன்முறையாகும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இவரது பதவிக்காலம் வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி ஒரு வருடத்துக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் நேற்று  (01) லோட்ஸில் நடைபெற்றது. இதன்போது தற்போதைய தலைவர் அந்தோனி ரைபோர்ட், கழகத்தின் அடுத்த தலைவராக குமார் சங்கக்காரவை அறிவித்தார்.

மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தில் (MCC) குமார் சங்கக்கார, 2011 ஆம் ஆண்டு பெறுமதியான உரையை ஆற்றியிருந்தார். அதனால் அந்தக் கழகத்தால் அவருக்கு 2012 ஆம் ஆண்டு மரியாதைக்குரிய வாழ்நாள் உறுப்பினர் என்ற கௌரவமளிக்கப்பட்டது. அதே ஆண்டில் அந்தக் கழகத்தின் உலக கிரிக்கெட் குழுவின் உறுப்பினராக இணைந்து கொண்ட குமார் சங்கக்கார, தொழிப்படும் உறுப்பினராக சேவையாற்றினார்.

 

 

Related posts

තිදෙනෙකුට දිවි අහිමි කළ මහනුවර ගොඩනැගිල්ලි අනතුර

Mohamed Dilsad

மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பான விசாரணை அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில்

Mohamed Dilsad

Sri Lanka Foreign Ministry, IOM repatriate 12 Sri Lankans migrant workers stranded in Somaliland

Mohamed Dilsad

Leave a Comment