Trending News

ஷரிஆ பல்கலைக்கழகம் குறித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை

(UTV|COLOMBO) கிழக்கு மாகாணத்தில் புனானியில் அமைக்கப்பட்டுள்ள ஷரிஆ பல்கலைக்கழகம் அல்லது மட்டக்களப்பு பீடம் (Batticoa Campus) என்று அடையாளப்படுத்தப்படும் அமைப்பு தொடர்பாக வெளியான பல செய்திகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது

கிழக்கு மாகாணத்தில் புனானியில் அமைக்கப்பட்டுள்ள ஷரிஆ பல்கலைக்கழகம் அல்லது மட்டக்களப்பு பீடம் (Batticoa Campus) என்று அடையாளப்படுத்தப்படும் அமைப்பு தொடர்பாக வெளியான பல செய்திகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

1978ஆம் ஆண்டு பல்கலைக்கழக சட்டம் (அடிக்கடி திருத்தம்) அமைவாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விடையதானத்துக்கு உட்பட்டமை 15 அரசபல்கலைக் கழகங்கள் போன்றவற்றின் கல்வி திட்டமிடுதல் மற்றும் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அந்த பல்கலைக்கழகங்களில் நிர்வாகங்களைமுறைப்படுத்தலுக்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதே மாத்திரம் ஆகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறித்த அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளது.

ஷரிஆ பல்கலைக்கழகம் அல்லது மட்டக்களப்பு பீடம் (BatticoaCampus) என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படும் எந்தவொரு நிறுவனமும் பட்டப்படிப்பு கற்கைநெறியை நடத்துவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அனுமதியை கோறவில்லை என்றும் இதற்காக எந்தவொரு அதிகாரமும் இவ்வாறான அமைப்புக்கு வழங்கவில்லை என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வலியுறுத்த விரும்புகிறது.

 

 

 

Related posts

Minister Rishad Bathiudeen comments on being called “Wilpattu Minister”

Mohamed Dilsad

Johnny Galecki, Alaina Meyer going to have a boy

Mohamed Dilsad

720 கிலோ கிராம் கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது…

Mohamed Dilsad

Leave a Comment