(UDHAYAM, ISRAEL) – இஸ்ரேலில் தாதி ஒருவரை நோயாளி ஒருவர் உயிருடன் எரித்து கொலை செய்துள்ளார்.
வெளிநாட்டு செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் தலைநகர் டெல்அவில் பகுதியில் உள்ள ஹோலோன் நகர சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது நோயாளி ஒருவரே இவ்வாறு தாதியரை உயிருடன் எரித்துள்ளார்.
குறித்த நோயாளிக்கு உதவுவதற்காகவே அந்த தாதியர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் அவருக்கு மருந்து வழங்கி கொண்டிருந்த போது திடீரென நோயாளி எரியும் தன்மை கொண்ட ஒரு திரவத்தை தாதியர் மீது வீசியுள்ளார்.
இதனால் தாதியர் உடலில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
பின்னர் அந்த இடத்தை விட்டு குறித்த நோயாளி தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் தீயை அணைத்து அவருக்கு சிகிச்சை வழங்கிய போதும் பரிதாபமாக தாதி உயிரிழந்துள்ளார்.
இந் நிலையில் தப்பி ஓடிய நோயாளியை அந்த நாட்டு காவற்துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள நோயாளி மன நிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், சிகிச்சையில் திருப்தி இல்லாததால் அவர் தாதியை எரித்து கொன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.