Trending News

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

(UTV|COLOMBO) நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிதி அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,  ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 135 ரூபாவாகும்.

இதற்கமைய லங்கா ஐஓசி நிறுவனமும் நேற்று  நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.

அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் ஒரு லீற்றர் 03 ரூபாவாலும், 95 ஒக்டைன் பெற்றோல் ஒரு லீற்றர் 05 ரூபாவாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 02 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் எவ்வித மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

Related posts

பிரபல நடிகருக்கு 5 ஆண்டு சிறை!!

Mohamed Dilsad

தெல்தெனிய கொலை சம்பவம் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

Mohamed Dilsad

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமா ஆரம்பம் [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment