Trending News

இன விரிசலை ஏற்படுத்தும் செயற்பாடுகள் குறித்து அமைச்சர் ரிஷாத் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…

(UTV|COLOMBO) சமூகங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் சில செயற்பாடுகள் முன்னடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று இரவு (12) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்;

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அசம்பாவிதங்களின் பின்னர் முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் குறிவைக்கும் வகையில் சில சக்திகள் செயற் படுகின்றன. கடந்த காலங்களில் திகன, கண்டி, அம்பாரை, உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்ததாலே என்னையும் இவர்கள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர். சமூகத்திற்கு எதிரான அநீதிகளைத் தட்டிக் கேட்கும் பொறுப்புக்களிலிருந்து என்னால் விலகிச் செயற்படமுடியாது. அதே போல எமது தாய்நாட்டுக்கு எதிராகச் செயற்படும் எந்தச் சக்திகளையும் பூண்டோடு அழிப்பதற்கு எனது முஸ்லிம் சமூகம் தாயாரகவுள்ளது.

இந்நிலையில் நாட்டைக் கொதி நிலையில் வைத்துக் கொண்டு மக்களை குறிப்பாக முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையிலே சில ஊடகங்களும்,ஒரு சில பௌத்த தேரர்களும் செய்திகளையும் கருத்துக்களையும் வௌியிடுகின்றமை கவலையளிக்கிறது. இந்த செயற்பாடு தொடர்ந்தால் இன மோதல்கள் ஏற்படலாமென நாம் அஞ்சுகின்றோம்.

இனங்களுக்கிடையிலான பதற்றத்தைத் தணித்து ஐக்கியத்தை உருவாக்கவே, நாம் முயற்சிக்கின்றோ. சட்டத்தை ஒரு சிலர் கையிலெடுப்பதற்கு அனுமதிக்க முடியாது. அரசாங்கம் இது தொடர்பில் அவசரமாகக் கவனமெடுக்க வேண்டும்.பொறுப்பின்றிச் செயற்படும் சில ஊடகங்களின் பிரச்சாரங்களால் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அமைதியாகவும் தேசப்பற்றுடனும் வாழும் முஸ்லிம்கள் அச்சமுற்றுள்ளனர். இவர்களின் அச்சத்தைப் போக்குவதும் இன்றைய தேவையாகவுள்ளது.

அப்பாவிகளைக் கொல்லும் காடையர்களுக்குப் பின்னால் முஸ்லீம் சமூகம் ஒரு போதும் சென்று விடாது. பயங்கரத்தின் பிடியிலிருந்து நாட்டை அவசரமாக விடுவிப்பது அனைவரதும் பொறுப்பாகும். இதற்கு முஸ்லிம் சமூகம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு

 

 

 

 

Related posts

Major General Amal Karunasekara Granted Bail

Mohamed Dilsad

ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் மறுசீரமைப்பு

Mohamed Dilsad

Windy condition expected to enhance

Mohamed Dilsad

Leave a Comment