Trending News

சந்தேகநபரைக் கைது செய்ய மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

(UTV|COLOMBO) கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடி குண்டு பொருத்தப்பட்ட வானை ​கொள்வனவு செய்யவும் வானுக்குரிய ஆசனங்களை அமைக்க உதவிய நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

குறித்த வானை கொள்வனவு செய்யவும் வானின் இருக்கைகளை அமைக்க உதவி செய்த நபர் குறித்து, நான்கு பேர் சாட்சி வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நால்வரின் சாட்சிகளுக்கமைய, சந்தேகநபரின் 4 உருவப் படங்களானது பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவின் அதிகாரிகளால் வரையப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சந்தேகநபர் 35- 40 வயதுக்கு அடைப்பட்டவர் என்றும், இவர் தொடர்பானத் தகவல் அறிந்தோர், குற்ற விசாரணை திணைக்களத்தின் 0112-2422176, 011-2392900 என்ற இலக்கத்துக்கோ அல்லது அருகிலிருக்கும் பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

 

 

Related posts

විදුලි බිල අඩු කරන්නේ මුදල් ඇමති අනුමත කළොත් – ලංවීම සභාපති

Editor O

Lungi Ngidi prepared for Sri Lanka

Mohamed Dilsad

கார்களின் மீது கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment