(UTV|COLOMBO) நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்காக நியமிக்கப்பட்ட புதிய பணிப்பாளர் சபையின் செயற்பாடுகளுக்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் இன்று(15) தடை விதிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் 4 பேரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகள் இன்று இடம்பெற்றபோது கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றம் இந்த தடையை விதித்துள்ளது.
குறித்த மனுவில், லிட்ரோ நிறுவனத்திற்காக அண்மையில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் ஆலோசனைக்கு அமைய குறித்த அமைச்சின் செயலாளரினால் புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மனுதாரர்கள், லிட்ரோ நிறுவனத்தினுள் திறைசேரியின் பங்கு இல்லாததால் நிதியமைச்சருக்கு அவ்வாறு பணிப்பாளர் சபையை நியமிக்க அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.