Trending News

8 நிமிடங்களில் 110.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போன ஓவியம்

(UTV|FRANCE) பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட் வரைந்த வைக்கோல் ஓவியம் 110.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு  ஏலம் போனது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட். அந்நாட்டின் நார்மண்டி பிராந்தியத்தில் வசித்து வந்த இவர் கடந்த 1890-ம் ஆண்டு, கிராமப்புற வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் வைக்கோல் போரை ஓவியமாக தீட்டினார்.

கிளாட் மொனெட் வரைந்த ஓவியங்களில் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த ஓவியம் வெவ்வேறு நாடுகளில் ஏலத்தில் விடப்பட்டு, பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது.

அந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சோத்பி ஏல நிறுவனம் கிளாட் மொனெட்டின் வைக்கோல் ஓவியத்தை அண்மையில் ஏலத்தில் விட்டது.

ஏலம் தொடங்கிய 8 நிமிடங்களில் இந்த ஓவியம், 110.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்த ஓவியம் 100 மில்லியன் டாலருக்கு அதிகமாக ஏலம் போனது இதுவே முதல் முறையாகும். கிளாட் மொனெட்டின் ஓவியங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஓவியம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Hurricane Florence starts to lash US east coast

Mohamed Dilsad

“Strengthen ‘Brand President’s Office” – Secretary Austin Fernando

Mohamed Dilsad

சில பிரதேசங்களுக்கு 06 மணி நேர நீர் வெட்டு…

Mohamed Dilsad

Leave a Comment