Trending News

புத்தம் புதிய ikmanjobs இணையத்தளம் தொழில் களத்தை மாற்றியமைக்கவுள்ளது

(UTV|COLOMBO) ikman.lk இலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் சந்தையானது,தொழில் வழங்குனர்கள் மற்றும் தொழில் தேடுவோர்களுக்கான புதிய பிரத்தியேக தளத்தின் மூலம் தொழில் தேடல் களத்தில் மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது.

முதன் முறையாக Ikman.lk, தொழிற்படையில் உள்ள ஒவ்வொருவருக்கும் புதுமையான தொழில் தேடல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு தனியான Landing Page ஆக ‘IkmanJobs’ ஐ உருவாக்கியுள்ளது.

சரியான தொழில் தேடுவோரை எதிர்பார்க்கும் தொழில் வழங்குனர்களுடன் மனித வலுவை இணைக்கும் பொருத்தமான தீர்வை ikmanjobs வழங்குகின்றது. தற்போது பக்கத்தின் நிறத்திட்டமும் செம்மஞ்சளுடன் கூடிய அழகான நீல நிற வண்ணத்துடன் உள்ளது.

புதிய தளத்தின் புதுமையான ஒரு சிறப்பம்சம் என்னவெனில், தொடர்ச்சியாக உருண்டு கொண்டிருக்கும் மேலே உள்ள Banner ஆகும். இதில் முக்கிய தொழில் வழங்குனர் விபரங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றது. தொழில் தேடுபவர்கள் அதில் காட்சிப்படுத்தப்படும் நிறுவனங்களின் லோகோக்களை கிளிக் செய்வதன் மூலம் அந்தந்த நிறுவனங்களில் உள்ள பணி வெற்றிடங்கள் தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தொழில் தேடுவோர்,தொழில் வழங்குனர்கள் இரு சாராருக்கும் உதவும் வகையில் சமூக வலைதளங்கள் இத்தளத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. முதன்மைத் தளத்தில் உள்ள தகவல்கள் இதற்கான பிரத்தியேக LinkedIn மற்றும் Facebook  பக்கங்களில் காட்சிப்படுத்தப்படுவதுடன்இ சுவாரஸ்யமானஇ தலைப்புக்குட்பட்ட தொழில் சம்பந்தமான பதிவுகள் சீராக அப்பக்கங்களில் பகிரப்படும்.

புதிய தளமானது இலகுவான Filtering  வசதியைக் கொண்டுள்ளதுடன் முன்னர் கிடைக்காத தொழில் தேடல் அனுபவத்தையூம் வழங்குகின்றது. இந்த ‘Search’ மற்றும் இலகுவான ‘Filter’ உள்ளம்சங்கள் ஊடாக பொருத்தமான விளம்பரங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்படும். இதன் மூலம் பயனாளிகளுக்கு அவர்களுக்கு தேவையான முடிவுகள் மட்டுமே கிடைப்பதுடன்,தேவையற்ற பிரிவுகள் காட்சிப்படுத்தப்படமாட்டாது.

விசேட தொழில் வழங்குனர்களில் Dialog, NTB, ODEL,SoftLogic, Cargills, LB Finance, Janashakthi,Pizza Hut மற்றும் பல உள்ளடங்குகின்றன. இந்தப் பட்டியல் புகழ்பெற்ற வர்த்தக நாமங்கள்,உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் அதிகரித்து வருகின்றது.

இதற்கும் மேலதிகமாக, இன்றைய தினம் வரை ikamnjobs மாதாந்தம் 233,o00 unique visitors, 220,000 தனிநபர்களின் சுயவிபரக் கோவைகளின் தரவுத்தளம், 14,000 விண்ணப்பங்கள், 4,100 Live ads மற்றும் 3,200 புதிய தொழில் விளம்பரங்கள் ஆகியவற்றைப் பெற்று குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளது.

“புதிய தொழில் இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம்,ikam.lk தொழில் தேடும் அனுபவத்தை பாரியளவில் மாற்ற எதிர்ப்பார்த்துள்ளது. ikmanjobs  குறிப்பாக பாரிய நிறுவனங்கள் மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான நிறுவனங்கள் (SMEs) தாம் வளர்ச்சியடைய தேவையான திறமைகளை வேலைக்கமர்த்தவூம்இ அவர்களது புதுமையான தேவைக்கேற்ற வாய்ப்புகளை வழங்கவூம் குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது”ikman.lk  சிரேஷ்ட முகாமையாளர் மெத்சலா அத்தநாயக்க தெரிவித்தார்.

 

 

Related posts

Governor Maithri Gunaratne tenders resignation

Mohamed Dilsad

மருத்துவ பீடத்தின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

Turkey’s Erdogan is Mesut Ozil’s best man

Mohamed Dilsad

Leave a Comment