Trending News

அரசமொழி தினமாக ஜூன் 3ஆம் திகதி பிரகடனம்

(UTV|COLOMBO) ஒவ்வொரு ஆண்டும் அரச மொழி தினமொன்றும் அதற்கமைவாக அரசமொழி வாரமொன்றும் பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்பொழுது அரச மொழிக் கொள்கைக்கு அமைவாக அனைத்து இலங்கையர்களின் மொழிக் கொள்கையை பாதுகாப்பதற்காக சிங்கள மற்றும் தமிழ் மொழியை அரச மற்றும் தேசிய மொழியாகவும் ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

இதற்கமைவாக ஜூன் 3ஆம் திகதி அரசமொழி தினமாக பிரகடனப்படுத்தவும் அன்றைய தினம் தொடக்கம் ஒரு வாரத்திற்கு அரச மற்றும் அரச சார்பற்ற பிரிவினரின் முழுமையான பங்களிப்பின் கீழ் அரச மொழிக் கொள்கையை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் நோக்காக கொண்ட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு அரச மொழி சமூகக் கொள்கை மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் சமர்ப்பித்த குறித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

 

Related posts

பழுதடைந்த முட்டைகளால் கேக் தயாரித்து வந்த பேக்கரி…

Mohamed Dilsad

8717 drunk drivers arrested

Mohamed Dilsad

ஜனாதிபதி முன்னிலையில் புதிய ஆளுநர்கள் ஐவர் நியமனம்

Mohamed Dilsad

Leave a Comment