(UTV|COLOMBO) நாடு முழுவதிலும் எதிர்வரும் தினங்களில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகவுள்ளது.
இதனால் ஏற்படக் கூடிய அனர்த்தங்களை எதிர்க்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி ஊடக பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
தென் மேற்கு பருவப்பெயர்ச்சி மழையுடன் ஏற்படக் கூடிய வெள்ளம் மற்றும் மண்சரிவு தொடர்பாக மாவட்ட மட்டத்தில் அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு கடந்த சில மாதங்கள் முதல் தொடர்ச்சியாக தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
ஏதேனும் பிரதேசத்தில் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அதற்காக முப்படை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட குழுவை தொடர்புபடுத்துவதற்காக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரிவு 24 மணித்தியாலமும் செயற்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். இதே வேளை வெள்ளத்தின் போது செயற்பட வேண்டிய முறை குறித்து பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.