Trending News

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான விண்ணப்பிக்கும் கால எல்லை அறிவிப்பு

(UTV|COLOMBO) இம்மாதம் 31 ஆம் திகதி வரையில் மாத்திரமே 2019 ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

                                                               ஊடக அறிக்கை

2019 ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதி தின அறிவிப்பு

2019 ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி 2019 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதை தயவுடன் அறிவித்துக் கொள்கின்றோம்.

02. 2019ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்த்திருக்கும் ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தை உரிய முகவரி ஆவணங்களுடன் 2019ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்க தகவல் திணைக்களத்திடம் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கின்றோம்.

03. சம்பந்தப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் விபரங்கள் www.news.lk  மற்றும் www.dgi.gov.lk என்ற இணையத்தளங்களின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.

நாலக்க கலுவே
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்

 

 

 

Related posts

President Sirisena and Indian Premier Modi in telephone conversation

Mohamed Dilsad

தென் மாகாணத்தில் சுகாதாரதுறை மேம்பாட்டுக்கு 41 கோடி ரூபா

Mohamed Dilsad

Showers expected in several places – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment