Trending News

சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு

(UTV|COLOMBO)  இன்றும் (26) நாட்டின் பல மாவட்டங்களில் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன கூறியுள்ளார்.

முப்படையினரும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த வேளையில் 24 பேர் கைது செய்யப்பட்டதாக மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Kyrgyzstan’s male headgear gets on Unesco’s cultural heritage list – [VIDEO]

Mohamed Dilsad

மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு

Mohamed Dilsad

No land in Wilpattu Forest Reserve released – Forest Conservation Dept.

Mohamed Dilsad

Leave a Comment