Trending News

ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்

(UTV|COLOMBO) ஜூன் மாதம் 22ம் திகதி முதல் ஜூலை மாதம் 01ம் திகதி வரை தேசிய போதைப்பொருள் வாரமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேலும் வலுப்பெறச் செய்து குறித்த செயற்பாடுகளை விரைவுப்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும்.

இதேவேளை, போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் குற்றச்செயல்களை குறைப்பதுடன் தொடர்புடைய சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

Related posts

மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்

Mohamed Dilsad

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – 2018 நுவரெலியா – நுவரெலியா பிரதேச சபை

Mohamed Dilsad

Cabinet approves Rs.250 million to compensate affected farmers by Fall army worm

Mohamed Dilsad

Leave a Comment