மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள ஏரி ஒன்றில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிர் இழந்துள்ளதுடன் நூற்றுக் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுள் 12 பெண்கள் மற்றும் 11 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த படகில் 300க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விபத்தை அடுத்து காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.