Trending News

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வீதி நிரல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்

(UTV|COLOMBO) பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன அடுத்த மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் பிரதான நகரங்களில் வீதியின் நிரல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் வாகன நெரிசல்களை மற்றும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறினார். இது தொடர்பில் சாரதிகளுக்கு நிவாரண காலம் வழங்கப்பட்டது .

இது தற்பொழுது அமுலில் உள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இது தொடர்பான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.

விஷேடமாக பயணிகள் போக்குவரத்து பஸ்கள் வீதியின் வலது பக்கத்தில் செல்ல வேண்டும். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதான வீதிகளில் இந்த பஸ்களுக்காக பிரதான வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இந்த விஷேட வீதி நிரல் கொழும்பு, கல்கிசை வெளிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த முக்கிய வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வலது புறத்தில் பொது போக்குவரத்து பஸ்கள் செல்லும் நடைமுறை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும்.

 

Related posts

த.தே.கூ யாருக்கு ஆதரவு?

Mohamed Dilsad

ආණ්ඩුව තවත් ණයක් ගනී

Editor O

நகரத்தை அலங்கரிப்பதில் ஈடுபட்ட இளைஞர் யுவதிகளுக்கு அரச விருது

Mohamed Dilsad

Leave a Comment