Trending News

பொது செயலாளர் அலுவலக புகையிரத தரிப்பிடம் இன்று முதல் திறப்பு

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட கரையோர புகையிரத  மார்க்கத்தின் பொது செயலாளர் அலுவலக தரிப்பிடம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் இதனை தெரிவித்துள்ளது.

அலுவலக புகையிரதங்கள் மாத்திரம் குறித்த தரிப்பிடத்தில் நிறுத்தப்படும் என அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி விஷேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இதற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விஷேட நுழைவாயில் மூலம் பயணிகள் உட்பிரவேசிக்குமாறு புகையிரத  கட்டுப்பாட்டு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று(03) ஆரம்பம்…

Mohamed Dilsad

கடலோர பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

Mohamed Dilsad

உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment