(UDHAYAM, COLOMBO) – பொது மன்னிப்பு காலத்தில் முப்படையில் சரணடையாத 41 ஆயிரம் உறுப்பினர்களில் ஆயிரத்து 994 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஆயிரத்து 570 பேர் இராணுவ வீரர்கள் என்பதுடன், அதில் 3 பேர் இராணுவ அதிகாரிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர்களுள் 393 பேர் கடற்படை வீரர்களுடன், 31 பேர் விமானப் படை வீரர்கள் எனவும் இராணுவ பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 6 மாதத்திற்கு மேலாக இராணுவ சேவையை கைவிட்டு சென்றுள்ள நிலையில், சேவையை கைவிட்டு சென்றமையை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.