Trending News

எதிர்க் கட்சி தலைவரின் புனித நோன்புப் பெருநாள் செய்தி

(UTV|COLOMBO) முஸ்லிம்களுக்கு வருடத்தில் மிகவும் மகிழ்ச்சிகரமான தினமாக இப்புனித நோன்புப் பெருநாள் தினம் விளங்குகின்றது. உண்மையான முஸ்லிம் ஒருவர் பொறுமை மற்றவர்களுக்கு உதவி செய்தல் மற்றவர்களின் பசியினை உணர்வுபூர்வமாக நோக்குதல் பிறருக்கு நோவினை நிந்தனை இம்சைகள் என்பன செய்யாதிருத்தல் பிற மதங்களையும் இனத்தவர்களையும் மதித்தல் மற்றும் தமது தாய் நாட்டிற்கு அன்பு காட்டுத்தல் ஆகிய நற்புண்புகளை கடைபிடிப்பதற்கு பயிற்றுவிக்கப்படுகின்றார்.

பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களுடன் இந்து கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் சமயங்களைப் பின்பற்றும் மக்கள் வாழுகின்ற எமது நாட்டிலே சமாதானம் ஒற்றுமை சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றிற்கும் மேற்கூறிய சமய வழிகாட்டல்களின் மூலம் மகத்தான பக்கபலமொன்று கிடைக்கப் பெறுகின்றது என எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்துள்ள புனித நோன்புப் பெருநாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எதிர்க் கட்சி தலைவரின் புனித நோன்புப் பெருநாள் செய்தி

Related posts

Swift measures to prevent dengue

Mohamed Dilsad

Govt. to review MCC Agreement, AG tells Supreme Court

Mohamed Dilsad

நடிகை சரண்யா மோகனின் தற்போதைய நிலை?

Mohamed Dilsad

Leave a Comment