Trending News

சிம்பு-ஹன்சிகா மீண்டும் இணைகிறார்களா?

ஹன்சிகா நடித்து வரும் 50வது திரைப்படமான ‘மஹா’ படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவரது காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

அந்த  நிலையில் இந்த படத்தில் சிம்புவும், ஹன்சிகாவும் ஜீப்பில் செல்வது போன்ற காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பின்போது சிம்பு, ஹன்சிகா மிகவும் அன்யோன்யமாக இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ஏற்கனவே பிரிந்த காதலர்களான சிம்பு-ஹன்சிகா மீண்டும் இணைவார்களா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் இருவரிடம் இருந்து வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது.

 

Related posts

பொலிஸ் ஊடக பேச்சாளர் சாரதிகளிடம் முக்கிய கோரிக்கை

Mohamed Dilsad

Mars Makes Its Closest Approach To Earth Today

Mohamed Dilsad

Fuel prices to be increased from midnight today

Mohamed Dilsad

Leave a Comment