Trending News

ஆஸ்திரேலியா அணியிடம் போராடி தோற்றது மேற்கிந்தியத்தீவுகள் அணி

அவுஸ்திரேலிய  அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 15 ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 288 ஓட்டங்களை பெற்றது.

இதையடுத்து, 49 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 288 ரன்கள் எடுத்தது. 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை துவக்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

எனினும், சாய் ஹோப், ஹோல்டர் ஆகியோர் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தனர். எனினும், அந்த அணியால், விக்கெட் சரிவை தடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு, 273 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் மிச்சேல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

 

 

Related posts

மீண்டும் பெற்றோலுக்குத் தட்டுப்பாடா?

Mohamed Dilsad

රුපියලේ අගය තවත් පහතට

Mohamed Dilsad

Moscow plane fire: 41 killed on Aeroflot jet

Mohamed Dilsad

Leave a Comment